/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
/
முதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : செப் 14, 2025 01:35 AM

கடலுார் : கடலுார் முதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து துறைமுகத்திற்கு மீண்டும் ரயில் பாதை அமைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளதா என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் துறைமுகத்தை நவீனமயமாக்கும் பணிகள் நடக்கிறது. இங்கிருந்து சரக்குகளை எடுத்துச் செல்ல ஆங்கிலேயர் காலத்தில் ரயில் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. அந்தப்பாதையை மீண்டும் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நேகி கடலுார் முதுநகர் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கடலுார் துறைமுகம் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில், 'அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
விழுப்புரம்- தாம்பரம் பயணிகள் ரயில், மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்துார் செல்லும ஜனசதாப்தி ரயில்களை கடலுார் துறைமுக சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும். கடலுார்-புதுச்சேரி- திண்டிவனம்-சென்னை ரயில் திட்டத்தை நிதியை அதிகப்படுத்தி பணியை துவக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.