/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை ரயில்வே ஜங்ஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
/
விருதை ரயில்வே ஜங்ஷனில் கோட்ட மேலாளர் ஆய்வு
ADDED : மே 09, 2025 03:36 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில்வே குடியிருப்பில், திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம் ரயில்வே குடியிருப்பில் புதிதாக கட்டப்பட்ட 8 குடியிருப்புகளை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேற்று திறந்து வைத்தார். பின், ரயில்வே குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வாலிபால் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து, ரயில்வே குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார்.
அவரிடம் ரயில்வே ஊழியர்கள், 'ரயில்வே குடியிருப்பு பகுதியில் வெளிநபர்கள் நடமாட்டத்தை தடுக்க சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். ரயில்வே திருமண மண்டபத்தில் 200 நபர்கள் அமர்ந்து சாப்பிட வசதியாக திருமண மண்டபத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். கூடுதல் குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.
கோட்ட உதவி பொறியாளர் சூரி ஜெகதீஷ், விருத்தாசலம் சீனியர் பொறியாளர் ஆம்புரோஸ், எஸ்.ஆர்.எம்.யு., தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ்குமார் உடனிருந்தனர்.

