/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 10, 2024 05:07 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினர் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், வரும் 16, 17 மற்றும் 23, 24 தேதிகளில் நடக்கும் வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் பணியினை செய்திட கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில், ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஜோதி, சிவபெருமாள், மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, இளைஞரணி துணை அமைப்பாளர் மதியழகன், வர்த்தக அணி செல்வராசு, நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய விவசாய அணி பாண்டுரங்கன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கடலுார்
கடலுார் மாநகர தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்திற்கு, செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மேயர் சுந்தரி ராஜா, துணைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, அவைத்தலைவர் பழனிவேல் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் நடராஜன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்கள் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேற்பார்வையாளர் சேதுமாதவன் ஆகியோர் ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
கூட்டத்தில் மண்டல குழு தலைவர் சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், ராஜ்மோகன், கார்த்திக், பகுதி செயலாளர்கள் லெனின் உட்பட பலர் பங்கேற்றனர்.