/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 28, 2025 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடியில் புவனகிரி தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், மதியழகன், ராயர், வெற்றிவேல், திருமூர்த்தி, தங்கஆனந்தன், ஞானமுத்து முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், 'நிர்வாகிகள் தீவிர தேர்தல் பணியாற்ற வேண்டும். புவனகிரி தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகள் பெற வேண்டும்.
நிர்வாகிகள் தங்கள் பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும்' என்றார்.