/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பரப்புரை
/
நெய்வேலி தொகுதியில் தி.மு.க., பரப்புரை
ADDED : டிச 27, 2025 06:40 AM

நெய்வேலி: நெய்வேலி தொகுதிக்குட்பட்ட வல்லம் மற்றும் வீரசிங்கம் ஊராட்சியில், 'என் ஓட்டுச்சாவடி - வெற்றி ஓட்டுச்சாவடி' தி.மு.க., பரப்புரை கூட்டம் நடந்தது.
இதில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'நெய்வேலி தொகுதி கிராமங்களில் மக்களுக்கு தேவையான புதிய சாலைகள், புதிய பள்ளி கட்டடங்கள், ரேஷன் கடைகள், சுகாதார நிலையங்கள், சாலை விரிவாக்கங்கள், ஏழைகள் மற்றும் மகளிருக்கான நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வரும் காலங்களிலும் நலத்திட்டங்கள் தொடரும்,'என்றார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஞானசேகர், அருள்முருகன், பொன்னம்பலம், சிவக்கொழுந்து, சக்கரபாணி, ராஜேந்திரன், முனுசாமி, பூவராகமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

