/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
/
தி.மு.க., நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்
ADDED : செப் 12, 2025 05:14 AM

நெய்வேலி: நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பண்ருட்டி வடக்கு ஒன்றியம் திருவாமூர், சிறுவத்துார் ஊராட்சிகளில் கிளைக் கழக நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ,. தலைமை தாங்கி, கிளைக் கழக நிர்வாகிகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
கூட்டத்தில், கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, அடிமட்ட பணிகளை வலுப்படுத்துவது குறித்தும், தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி விளக்குவது, மற்றும் உள்ளூர் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார், ராஜசேகர், துணை செயலாளர்கள் செழியன், முருகன், இளைஞரணி முருகன், வழக்கறிஞர்கள் ஜெகஜீவன்ராம், குமார், கிளை செயலாளர்கள் நாமதேவன், தங்கவேல் தாமோதரன், ஞானவேல்,பாலமுருகன் சேகர் சுப்பிரமணி, கோவிந்தன் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.