/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க.,ஒன்றிய செயற்குழு கூட்டம்
/
தி.மு.க.,ஒன்றிய செயற்குழு கூட்டம்
ADDED : அக் 31, 2025 02:25 AM
நடுவீரப்பட்டு' ; நடுவீரப்பட்டில் கடலுார் மேற்கு ஒன்றிய தி.மு.க.,செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன்,மாவட்ட விவசாய அணித்தலைவர் வைத்திலிங்கம்,அவைத்தலைவர் சாரங்கபாணி  முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக குறிஞ்சிப்பாடி தொகுதிபார்வையாளர் சின்னமணி பேசினார்.
கூட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பணி சம்மந்தமாகவும்,என் வாக்குசாவடி,வெற்றி வாக்குசாவடி செயல் திட்டத்தில் தீவிரமாக பணியாற்றுவது சம்மந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய துணை செயலாளர் ஜோதி,வானமாதேவி தேவராஜ், வேல்முருகன்,பாண்டுரங்கன்,வர்த்தக அணி செல்வராசு,வாக்குசாவடி முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

