/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., மா.செ., அறிவுறுத்தல்
/
புதிய வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., மா.செ., அறிவுறுத்தல்
புதிய வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., மா.செ., அறிவுறுத்தல்
புதிய வாக்காளர்களை சேர்க்க தி.மு.க., மா.செ., அறிவுறுத்தல்
ADDED : செப் 27, 2024 05:41 AM
கடலுார்: புதிய வாக்காளர்களை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதையொட்டி பெயர்களை கட்சியினர் ஈடுபட வேண்டும் என தி.மு.க., மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:
இந்திய தேர்தல் ஆணையம் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் செய்திட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை அக்டோபர் 29ம் தேதி வெளியிட உள்ளது.இதனால், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும், வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28ம் தேதி வரை புதிய வாக்காளர்களில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்யவும் மனு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சனி, ஞாயிறு நாட்களில் ஓட்டுச் சாவடி மையங்களில் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 வரை சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வாக்காளர்களை சேர்க்கும்பணியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்றேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

