/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக்கூடாது உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

ADDED : அக் 26, 2024 06:33 AM
கடலுார்: தீபாவளியை பண்டிகையொட்டி பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் பு. முட்லுார் ஆகிய பகுதிகளில் ஏராளமான கடைகளில் பலகாரங்கள், இனிப்பு வகைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதை உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் பணியாளர்கள் கையுறை, தலை முடி கவசம் அணிய வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது. ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தரமான மூலப் பொருட்களை பயன்படுத்தி கார வகைகள், இனிப்பு வகைகள் தயார் செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான செயற்கை வண்ணங்களை சேர்த்து தயார் செய்யக்கூடாது என, அறிவுரை வழங்கினர்.
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கடையை நடத்த வேண்டும்.
மீறினால் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்ல தம்பி, சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.