/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் காணிக்கை
/
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ரூ.13 லட்சம் காணிக்கை
ADDED : ஜன 25, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.
இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலையில், 9 நிரந்தர உண்டியல், 1 திருப்பணி உண்டியல் என 10 காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன.காணிக்கை எண்ணும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
இதில், 13 லட்சத்து 85 ஆயிரத்து 329 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கம், 42 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.