ADDED : ஜூலை 09, 2025 08:09 AM
செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் ஏற்படுத்தும் கேள்விகள்:
* பள்ளி வேன் டிரைவர் தினமும் அந்த வழியாகத்தான் சென்று குழந்தைகளை ஏற்றி வருகிறார். அவ்வாறு இருக்கும்போது, விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் நேரம் வேன் டிரைவருக்கு தெரியாமல் போனது எப்படி.
* சாதாரணமாக நாம் சாலையை கடக்கும்போது, இருபுறமும் பார்த்து விட்டுதான் கடக்கிறோம். ஆனால், ரயில் பாதையைக் கடக்கும்போது, இருபுறமும் பார்க்காமேலே கடக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
* ரயில்வே கேட் திறந்திருந்த போதிலும், வேன் டிரைவர் பல மாணவர்களின் எதிர்காலத்தை கருதி பொறுப்பாக நடந்து கொண்டிருக்க வேண்டாமா?
*  விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் வரும்போது எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கால்நடைகளுக்காகவும், சாலையை பாதசாரிகள் கடப்பதற்காகவும் எச்சரிக்கை செய்ய ரயில் டிரைவர் ஹாரன் அடித்திருக்க வேண்டும்.

