/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மழையால் பாதித்த 2,000 பேருக்கு உணவு டாக்டர் பிரவீன் அய்யப்பன் வழங்கல்

ADDED : டிச 03, 2024 06:11 AM

கடலுார்: கடலுாரில் மழையால் பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் உணவு வழங்கினார்.
கடலுார் மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, அய்யப்பன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்பேரில், டாக்டர் பிரவீன் அய்யப்பன் சந்தித்து ஆறுதல் கூறி உணவு வழங்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடலுார் வெளிச்செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, குண்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட 2,000 பேருக்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் நேற்று உணவு வழங்கி ஆறுதல் கூறினார்.
வேலன் ஸ்டீல்ஸ் உரிமையாளர் வேலவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.