/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு; டாக்டர் விக்னேஷ் தகவல்

ADDED : அக் 01, 2025 01:36 AM

விருத்தாசலம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்நோக்கு மருத்துவமனையில், விரைவில் 24 மணி நேர அவசர சிகிச்சை பிரிவு துவங்க உள்ளது என டாக்டர் விக்னேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரியில் உள்ள சிதம்பரம் சாலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்பெஷாலிட்டி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம் அமைந்துள்ளது.
இங்கு, அவசர சிகிச்சை, இருதயம், கிட்னி, நுரையீரல், கல்லீரல், பிரச்னைகள் மற்றும் சர்க்கரை நோய், பக்க விளைவுகள், ஆஸ்துமா, தைராய்டு, ரத்தகொதிப்பு, கொலஸ்ட்ரால் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
அதே போன்று, டாக்டர் சவுமியா விக்னேஷ், மகப்பேறு மற்றும் பிரசவம், குழந்தையின்மை, மாதவிடாய் தொந்தரவு, வெள்ளைபடுதல், கர்ப்ப பை புற்றுநோய், அனைத்து விதமாக லெப்ராஸ்கோபி, ஹிஸ்டராஸ்கோபி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.
தற்போது, செயல்பட்டு வரும் மருத்துவமனை அருகே, மிக பிரம்மாண்டமாக அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இங்கு, 24 மணி நேர விபத்து சிகிச்சை பிரிவு, 24 மணி நேர அவசர சிகிச்சை நிபுணர், ஐ.வி.எப்., லேப், டயாலிசிஸ், 3டி, 4டி, டாப்லர் யு.எஸ்.ஜி.,ஸ்கேன், சி.டி., ஸ்கேன், மாடுலர் அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகளுக்கு ஐ.சி.ஓ., ஏ.சி., அறைகள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன வசதிகள் செய்யப்பட உள்ளது.
அனைத்து மருத்துவ இன்சூரன்ஸ் கார்டுகளும் ஏற்றுக்கொள்ளபட்டு, அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.