தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காவலாளியை தாக்கிய போதை வாலிபர் சரண்

காவலாளியை தாக்கிய போதை வாலிபர் சரண்

காவலாளியை தாக்கிய போதை வாலிபர் சரண்


ADDED : செப் 12, 2025 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2025 07:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் போலீசின் துப்பாக்கிச்சூடு, மாவுக்கட்டுக்கு பயந்த போதை வாலிபர் சரணடைந்தார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம், பழமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கார்த்திக், 45; காவலாளியான இவரை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, சிவா (எ) விக்னேஷ், செந்தில்குமார் மகன் பாலாஜி, 24; ஆகியோர் கடந்த 9ம் தேதி அதிகாலை கண்மூடித்தனமாக பயங்கர ஆயுதங்களால் தாக்கி, இன்ஸ்டாகிராமல் பதிவேற்றம் செய்தனர்.

தொடர்ந்து, அரசு மருத்துவமனை வளாகத்தில் கடை வைத்திருக்கும் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, அரசு பஸ் டிரைவர் கணேசன், 59; ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பியோடினர்.

எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின்படி, முந்திரிதோப்பில் பதுங்கியிருந்த கந்தவேலு உள்ளிட்டோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில், கந்தவேலுக்கு காலில் குண்டு பாய்ந்த நிலையில், விக்னேஷ் கை, கால்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. தப்பியோடிய பாலாஜி, தங்களால் காயமடைந்த நபர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ நேற்று முன்தினம் மாலை சமூக வவைதளங்களில் வைரலானது.

தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு, மாவுக்கட்டுக்கு பயந்த அவர், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு தனது பெற்றோருடன் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந் தார். காவலர் கார்த்திக், கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, பஸ் டிரைவர் கணேசன் ஆகியோரது புகார்களின் பேரில், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து, பாலாஜியை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us