ADDED : மே 20, 2025 06:49 AM

கடலுார் : கஞ்சா வியாபாரியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் துறைமுகம் போலீசார், கடந்த 23ம் தேதி போதைப்பொருட்கள் குற்ற தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பச்சையாங்குப்பம், முத்தாலம்மன் கோவில் அருகே தென்னந் தோப்பில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த கடலுார், புதுப்பாளையம் ஆர்.பி., நகரைச் சேர்ந்த சீனிவாசன், 24, நெப்போலியன், அஜித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அதில், சீனிவாசன் மீது கஞ்சா, கொலை முயற்சி என 5 வழக்குகள் உள்ளன.
அவரின் குற்றச் செயலை தடுக்கும் பொருட்டு எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சீனிவாசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் கடலுார் மத்திய சிறையில் உள்ள சீனிவாசனிடம் நேற்று உத்தரவு நகலை போலீசார் காண்பித்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.