/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
/
ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 29, 2025 03:25 AM

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சிகாமணி வரவேற்றார்.
தொடர்ந்து, ஹேமலதா கலைக்குழுவினர் போதையினால் ஏற்படும் உடல் நலக்கேடுகள், தீமைகள், சமூகம் மற்றும் குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ராஜசேகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.