/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
/
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 25, 2025 11:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்; பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பேரூராட்சி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன், உதவி தலைமை ஆசிரியைகள் மகேஸ்வரி, காமாட்சி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார்.
ஆசிரியர்கள், மாணவிகள், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ராஜ்குமார், பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவிகள் பங்கேற்ற போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியை காயத்ரி நன்றி கூறினார்.