/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளிகளில் விரைவில் 'ஈட் ரைட் ஸ்கூல்' திட்டம்
/
பள்ளிகளில் விரைவில் 'ஈட் ரைட் ஸ்கூல்' திட்டம்
ADDED : செப் 22, 2024 02:10 AM
கடலுார்: பள்ளி குழந்தைகள் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக 'ஈட் ரைட் ஸ்கூல்' விரைவில் அமலுக்கு வருகிறது.
கடலுார் கலெக்டர் அறிவுறுத்தலின்படி, பள்ளிக் குழந்தைகளிடத்தில் பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக 'ஈட் ரைட் ஸ்கூல்' என்ற திட்டம் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அமலுக்கு வருகிறது. இது, பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அடித்தளமாக அமையும்.
மத்திய அரசின் மூலம் வழங்கப்படும் ('ஈட் ரைட் ஸ்கூல்') இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், அனைத்து பள்ளிகளையும் https://eatrightindia.gov.in/என்ற இணைய தளத்தில் பதிவு செய்திடவும் தெரிவித்துள்ளார். இத்திட்டம் பள்ளி வகுப்பு மூலம் மாணவர்கள் தங்கள் உணவு பழக்கத்தை மேம்படுத்தவும், தன் சுகாதாரம் பேணிக்காக்கவும் ஊக்குவிக்க உறுதுணையாக அமையும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.