/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
/
அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்
ADDED : ஜூலை 19, 2025 03:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டப்பட்டது.
விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைவர் சிவக்குமார் பங்கேற்று சான்றிதழ், பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே பேசினார். பள்ளி துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.