/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
/
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
ADDED : ஜூலை 18, 2025 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: நெய்வேலி நாடார் பேரவை சார்பில் மந்தாரக்குப்பம் கடைவீதியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பேரவை தலைவர் ஜெயகீதன் தலைமை தாங்கினார். காமராஜர் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ராஜமாரியப்பன், பள்ளி மாணவர்களுக்கு பேனா, நோட்டு புக், இனிப்புகள் வழங்கி காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். நிர்வாகிகள் வேல்முருகன், சின்னதுரை, சக்திவேல், பாண்டியராஜன், பெரியசாமி, சங்கர், ஜெயராஜ், சுந்தரேஸ்வரன், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்

