தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை: எஸ்.பி.,

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை: எஸ்.பி.,

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை: எஸ்.பி.,


UPDATED : நவ 15, 2026 12:23 AM

ADDED : நவ 15, 2026 12:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:23 AM ADDED : நவ 15, 2026 12:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: மாவட்டத்தில் இந்தாண்டில் காணாமல் போனவர்களில் 1,055 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்.பி., விவேகானந்தா சுக்லா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில், கடந்த 11ம் தேதி பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட 12 வழக்குகளில், 2 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மற்ற 10 வழக்குகளில் காணாமல் போனவர்கள், அவர்களது தனிப்பட்ட காரணங்கள் மற்றும் குடும்பப் பிரச்னைகள் கா ரணமாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை விரைந்து கண்டுபி டிக்க தொடர் நடவடிக் கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டில் மாவட்டத்தில் காணாமல் போன தாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், இதுவரை 1,055 பேர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us