ADDED : நவ 14, 2026 11:09 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி: மளிகை கடையில் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் மேற்கு, ஆலப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அர்சுனன் மனைவி ஆண்டாள், 65. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர். இவர் நேற்று (நவ.,13) இரவு வியாபாரம் முடிந்து, வழக்கம் போல் கடையை மூடிவிட்டு கடையில் உள்ளே தூங்கினார். அப்போது நள்ளிரவில் கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கல்லாவில் இருந்த ரூ.,15 ஆயிரத்தை திருடி தப்பினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.
