தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் மத்திய சிறையில் வாசகர் வட்டம் தொடக்கம்

கடலுார் மத்திய சிறையில் வாசகர் வட்டம் தொடக்கம்

கடலுார் மத்திய சிறையில் வாசகர் வட்டம் தொடக்கம்


ADDED : நவ 14, 2026 08:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 08:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மத்திய சிறையில் கைதிகள் பயனடையும் பொரட்டு, பாரதியார் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது.

கடலுார் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் என மொத்தம் 1011 கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாகவும் அதன் மூலம் குற்ற உணர்ச்சிகள், குற்ற எண்ணங்களை குறைக்கும் விதமாகவும், கைதிகள் பங்குபெறும் பாரதியார் வாசகர் வட்டம் இன்று (நவ.,14) தொடங்கப்பட்டது. இதில், புத்தகம் வாசிக்கும் திறன் உள்ள கைதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.00 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெறும். கடலுார் மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகள் நேரிடையாகவும், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட சிறைகளில் உள்ள கைதிகள் ஆன்–லைன் வாயிலாக இந்நிகழ்ச்சியை பார்க்கலாம்.

நிகழ்ச்சியை பற்றிய கருத்துக்களை எழுதி அனுப்பும் கைதிகளின் சிறந்த முதல் மூன்று கருத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

தொடக்க நிகழ்ச்சியில் சிறை கண்காணிப்பாளர் (பொ) வினோத், துணைச்சிறை அலுவலர் விவேக், நல அலுவலர் தமிழ்செல்வன், தொழில்நுட்ப உதவி ஆய்வாளர் சுரேஷ்மோகன், சிறைப்பள்ளி ஆசிரியர் ஷாலினி, மனநல ஆலோசகர்கள் இளையபாரதி, கலைவாணன், சமுக இயல் நிபுணர் சோனி கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us