ADDED : ஏப் 16, 2025 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மாட்டு வண்டியில் மணல் கடத்திய வழக்கில் முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டி.புதுாரை சேர்ந்த துரைராஜ், 61; அவரது மனைவி வள்ளி, மகன் பாஷா ஆகியோரும், எம்.புதுாரை சேர்ந்த காளிமுத்து, அவரது மனைவி தையல்நாயகி, மகன் குரு ஆகியோரும் தனித்தனியாக மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்தியது தெரிந்தது.
திருப்பாதிரிப்புலியூர் போலீசார், துரைராஜ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இதில், துரைராஜ் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.