ADDED : டிச 30, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே வேன் மோதி, முதியவர் இறந்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி எஸ்.பி., மண்டபம் பகுதியை சேர்ந்தவர் குமரன், 70; இவர் நேற்று அரியகோஷ்டி பிள்ளையார் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மகேந்திரா வேன், குமரன் மீது மோதியது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

