/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கெடிலம் ஆற்றில் தவறி விழுந்து முதாட்டி பலி
/
கெடிலம் ஆற்றில் தவறி விழுந்து முதாட்டி பலி
ADDED : டிச 09, 2024 08:16 AM
பண்ருட்டி,: பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் தவறி விழுந்து முதாட்டி பலியானது குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த பி.ஆண்டிக்குப்பம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் சாரங்கபாணி. இவரது மனைவி அம்சையா,75;
இவர் நேற்று காலை 10:0௦ மணிக்கு பழைய பாலம் வழியாக பண்ருட்டிக்கு தனது அம்மாவிற்கு சாப்பாடு எடுத்து சென்றார்.
ஆற்றை கடக்கும் போது தவறி விழுந்து ஆழமான பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இதுகுறித்து அக்கம்,பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அம்சையா உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்