ADDED : அக் 25, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனுாரை சேர்ந்த துரைக்கண்ணு மனைவி ரஞ்சிதம், 60; மீன் வியாபாரி. இவர் கடந்த 16 ஆம் தேதி நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். சிகிச்சை முடிந்து கிராமத்திற்கு செல்ல நடந்து சென்றார். அவ்வழியாக வந்த எய்தனுாரைச் சேர்ந்த சதாசிவம், தனது பைக்கில் மூதாட்டி ரஞ்சிதத்தை பைக்கில் அழைத்து சென்றார்.
மேல்பாதி அருகே சென்றபோது எதிரே வந்த பைக் சதாசிவம் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரஞ்சிதம் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

