/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் நாளை வார்டு சபை கூட்டம்
/
நெல்லிக்குப்பத்தில் நாளை வார்டு சபை கூட்டம்
ADDED : அக் 25, 2025 11:14 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் வார்டு சபை கூட்டங்கள் நடக்கிறது.
நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை;
தமிழக அரசின் உத்தரவுபடி மொத்தம் உள்ள 30 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் முன்னிலையில் 27 மற்றும் 28 தேதிகளில் வார்டு சபை கூட்டங்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்காக்கள் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, நீர் ஆதாரங்கள் மேம்படுத்துதல், நகராட்சி பள்ளிகளில் பராமரிப்பு போன்றவற்றில் குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம். மக்கள் தெரிவிக்கும் 3 பிரதான கோரிக்கைகளை அரசுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

