/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் விபத்து அபாயம்
/
ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் விபத்து அபாயம்
ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் விபத்து அபாயம்
ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் விபத்து அபாயம்
ADDED : டிச 09, 2025 07:02 AM
வேப்பூர்: வேப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள், மக்கள் அச்சமடைகின்றனர்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கடலுார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் வேப்பூர் அருகே ஐவதுகுடி ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இதன் வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் 'திக் திக்' மனநிலையில் பயணிக்கின்றனர்.
மழைக் காலங்களில் மோட்டார் பைக்கில் செல்வோர் தடுமாறி செல்கின்றனர்.
மேலும், மேம்பாலத்தில் சிலர் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சர்வீஸ் சாலையை மக்கள் பயத்துடன் கடந்து செல்கின்றனர்.
எனவே, ஐவதுகுடி ரயில்வே மேம்பாலத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதியில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

