/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெடுஞ்சாலைத்துறை சீர்கேட்டினை கண்டித்து பொறியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

ADDED : செப் 25, 2025 04:32 AM

கடலுார் : நெடுஞ்சாலைத்துறையில் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து இளைநிலைப் பொறியாளர்கள் நேற்றுகடலுாரில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறையில் இளைநிலை பொறியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரையில் 7 ஆண்டுகளாக பணிவரன்முறை செய்யப் படாமல் உள்ளது.
அவர்களுக்கு பணிவரன்முறை செய்து உரிய ஆணை பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதன்மை இயக்குனருக்கு இச்சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பணி வரன்முறை செய்யப்படவில்லை.
2007-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உள்ள பணி விதிகளின்படி இளநிலை பொறியாளர் பணிநியமனம் செய்யாமல் சுமார் 18 ஆண்டுகளாக காலதாமதம் செய்து வருகிறது.
நெடுஞ்சாலை இளநிலைபொறியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவீத இட ஒதுக்கீட்டில் உதவி பொறியாளர் களை நியமிக்கக்கூடாது என விதிகளை மேற்கோள்காட்டி தீர்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 85 பணியிடங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 22 பணியிடங்கள் மட்டுமே உள்ளது.
தொடர்ந்து 25 சதவீத இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டித்து முதற்கட்டமாக நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
மாநிலத் தலைவர் ஜெகன், மண்டல செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் மகேந்திர பாபு,மாவட்ட தலைவர் விக்ரம் கலந்து கொண்டனர்.