/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் சுற்றுச்சூழல் தினம்
/
என்.எல்.சி.,யில் சுற்றுச்சூழல் தினம்
ADDED : ஜூன் 07, 2025 02:53 AM

நெய்வேலி, : கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பூங்காவில் என்.எல்.சி., இந்தியா நிறுவனம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது.
என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் சமீர் ஸ்வரூப் தலைமை தாங்கினார். பின், கழிவு பொருட்களை பயனுள்ள மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களாக மாற்றுவது எப்படி என்பதை விளக்கும் 'கழிவில் இருந்து சூழல் நட்பு' என்ற தலைப்பிலான கண்காட்சியைத் திறந்து வைத்தார்.
மின்துறை இயக்குனர் வெங்கடாசலம், என்.எல்.சி.,விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி., செயல் இயக்குநர் அன்புச்செல்வன் வரவேற்றார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்கள் அனைவருக்கும் உள்ள பொறுப்பை உணர்த்தும் விதமாக, விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது. வீடுகளில் பசுமையை ஊக்குவிக்கவும், பாரம்பரிய மூலிகை மருத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மருத்துவத் தாவரங்கள் விநியோகிக்கப்பட்டன.