ADDED : ஜூன் 17, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : வடலுார் சியோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பள்ளி தாளாளர் பிரவீன் சாமுவேல் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். வடலுார் பஸ் ஸ்டாண்டில் துவங்கி பேரணி சபை பஸ் நிறுத்தம் வரை நடந்தது. பேரணியாக சென்ற, 200 மாணவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த கோஷங்களை எழுப்பி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.