/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வாய்க்காலில் உபரி நீர் வெளியேற்றம்
/
வாய்க்காலில் உபரி நீர் வெளியேற்றம்
ADDED : நவ 25, 2025 05:12 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு குமார உடைப்பு வாய்க்காலில் உபரி நீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த வீரமுடையாநத்தம், சின்னகுப்பம், பெரியநற்குணம், தட்டானோடை, விளக்கப்பாடி, உள்ளிட்ட பகுதி விளைநிலங்களில் வடியும் மழைநீர் ஆணைவாரி ஓடைக்கு செல்கிறது. ஆணைவாரி ஓடையில் வடியும் மழைநீரும், பின்னலுார், நெல்லிக்கொல்லை, துறி ஞ்சிக்கொல்லை ஆகிய பகுதிகளில் வடியும் மழைநீரும் வெள்ளாறுராஜன் வாய்க் காலில் கலப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் வீரமுடையாநத்தம் உள்ளிட்ட வயல்வெளிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால், மழைநீர் அதிகளவு வெளியேறி ஆணைவாரி ஓடையில் வரத்து அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளாறுராஜன் வாய்க்காலில் குமார உடைப்பு வாய்க்காலில் ஷட்டர்களை திறந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உபரிநீரை வெளியேற்றி வெள்ளாற்றில் அனுப்பி வருகின்றனர்.

