/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலி
/
மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலி
மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலி
மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலி
ADDED : மார் 27, 2025 04:23 AM
பரங்கிப்பேட்டை: கடலுார் மாவட்டத்தில், 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால், அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடலுார் மாவட்டத்தில் 14 பேரூராட்சிகள் உள்ளன. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், பொது சுகாதாரம், தெருமின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை மற்றும் பல்வேறு வசதிகள் செயல் அலுவலர்கள் மூலம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில், தற்போது பரங்கிப்பேட்டை, கிள்ளை, புவனகிரி, அண்ணாமலைநகர், லால்பேட்டை, சேத்தியாதோப்பு, கெங்கைகொண்டான் ஆகிய 7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ளது. செயல் அலுவலர்கள் இரண்டு மற்றும் மூன்று பேரூராட்சிகளை கவனித்து வருவதால், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
7 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் பணியிடம் காலியாக உள்ளதால் பொறுப்பு செயல் அலுவலர்களே கவனித்து வருகின்றனர்.
எனவே, செயல் அலுவலர் பணியிடம் காலியாக உள்ள பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.