தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 150 ஆண்டுகள் பழமையான பெலாந்துறை அணைக்கு விழா எடுக்க... எதிர்பார்ப்பு:அரசு நடவடிக்கை மேற்கோள்ள விவசாயிகள் வலியுறுத்தல்

150 ஆண்டுகள் பழமையான பெலாந்துறை அணைக்கு விழா எடுக்க... எதிர்பார்ப்பு:அரசு நடவடிக்கை மேற்கோள்ள விவசாயிகள் வலியுறுத்தல்

150 ஆண்டுகள் பழமையான பெலாந்துறை அணைக்கு விழா எடுக்க... எதிர்பார்ப்பு:அரசு நடவடிக்கை மேற்கோள்ள விவசாயிகள் வலியுறுத்தல்


UPDATED : செப் 28, 2026 04:57 AM

ADDED : செப் 27, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 28, 2026 04:57 AM ADDED : செப் 27, 2026 08:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்ணாடம்:பெண்ணாடம் அருகே ஆங்கிலேயர் காலத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் பெலாந்துறை அணைக்கு, நடப்பாண்டில் 150வது ஆண்டு என்பதால் அரசு விழா நடத்த வேண்டும் என திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெலாந்துறையில் வெள்ளாற்றின் குறுக்கே கடந்த, 1876ல், 200.80 மீ., நீளத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விவசாய பாசனத்திற்காக அணைக்கட்டு கட்டப்பட்டது.

வடகிழக்கு மற்றும் கோடை மழை காலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பாசன கிளை வாய்கால்கள் மூலம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவில் உள்ள சேதுவராயன்குப்பம், ஆனந்தகுடி, டி.வி.புத்துார், ராஜேந்திரபட்டினம், பூண்டி, கொக்கரசன்பேட்டை, குணமங்கலம், வண்ணாங்குடிகாடு, நெசலுார், சேல்விழி உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள நீர்வளத்துறைக்கு சொந்தமான, 18 பாசன ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது வழக்கம்.

மேலும், இந்த அணை நீரை பயன்படுத்தி பெலாந்துறை, பாசிக்குளம், கணபதிகுறிச்சி, ஸ்ரீமுஷ்ணம், ராஜேந்திரப்பட்டிணம் இரு தாலுகாவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் நெல், கரும்பு, கேழ்வரகு மற்றும் தோட்டப்பயிர்கள் என, 12 ஆயிரத்து 234 ஏக்கர் பரப்பிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

போதிய பராமரிப்பின்றி உள்ள அணைக்கட்டு கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் நீர்வளம் மற்றும் நிலவள திட்ட நிதியில், 7 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் துவங்கி, முடிந்தது.

தற்போது வெள்ளாற்றின் குறுக்கே பெலாந்துறை அணைக்கட்டு, 150 ஆண்டுகளாக இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அவ்வாறு கம்பீரமாக காட்சியளிக்கும் பெலாந்துறை அணைக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை இதற்கான அறிவிப்பு வெளியாவில்லை.

இன்னும் 3 மாதத்தில் 150வது ஆண்டு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ளது.

புதிய ஆட்சியில் அமைச்சர், கலெக்டர், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் பெலாந்துறை அணைக்கட்டை ஆய்வு செய்து, 150வது ஆண்டு விழா நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.இதுகுறித்து, பெலாந்துறை அணைக்கட்டு பாசன பகுதி விவசாயிகள் கூறுகையில், 'பெலாந்துறைக்கும், கொசப்பள்ளத்திற்கும் இடையே வெள்ளாற்றின் குறுக்கே அணை கட்டி, 150 ஆண்டுகள் ஆகிறது. அணைக்கட்டு பார்ப்போர்களை வியக்க வைக்கும் வகையில் இன்றும் கம்பீரமாக உள்ளது. அவ்வாறு உள்ள அணைக்கு அரசு சார்பில் விழா எடுக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அவ்வாறு விழா எடுத்தால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us