
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேப்பூர்: வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் புதுச்சேரி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு, வேப்பூர் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி திருஞானம் தலைமை தாங்கினார். வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
தே.மு.தி.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் மாயவேல், ஒன்றிய துணைச் செயலர் பச்சமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். இதில், கண் புரை, கிட்ட பார்வை, தூர பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

