
சிதம்பரம் : சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், காஸ்மாபாலிடன் லயன்ஸ் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
சிதம்பரம் ஆறுமுக நாவ லர் நிலையத்தில் நடந்த முகாமில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் கமல் கிஷோர் ஜெயின், சென்ட்ரல் ரோட்டரி சங்கட்டனா தலைவர் ஹரிகிருஷ்ணன், காஸ்மாபோலிடன் லைன்ஸ் சங்கத் தலைவர் இளஞ்செழியன், பாரதிய ஜெயின் சங்க தலைவர் மனிஷ்குமார் தலைமை தாங்கினர்.
ரோட்டரி மண்டல ஆளுநர் புகழேந்தி, சாசன தலைவர் முகமது யாசின், தீபக்குமார் முன்னிலை வகித்தனர். 400க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் 80 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் வெங்கடேசன், ரோட்டரி செயலாளர் புகழேந்தி, பொருளாளர் கோவிந்தராஜன் செய்திருந்தனர்.