ADDED : மார் 06, 2026 03:51 AM

பண்ருட்டி: கார் மோதி பைக்கில் சென்ற விவசாயி பலியானது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
நெய்வேலி, இந்திராநகர் மாற்று குடியிருப்பு பகுதியை ேசர்ந்தவர் கந்தவடிவேல்,53; இவர் தனது பைக்கில்,
நண்பர் பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த தனசேகரன்,55; விவசாயி, என்பவரை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு காடாம்புலியூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பைக் பின்னால் உட்கார்ந்திருந்த தனசேகரன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கந்தவடிவேல் பலத்தகாயத்துடன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

