ADDED : டிச 08, 2025 06:03 AM

கடலுார்: கடலுார் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் மற்றும் வட்டார தொழில் நுட்பக்குழு கூட்டம் நடந்தது.
வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) அமிர்தராஜ் தலைமை தாங்கி, விவசாயிகளுக்கு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் இ-மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி குறித்து பேசினார். வட்டார அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார்.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ், வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்ரீவித்யா, தோட்டக்கலைத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் பேசினர்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர் மகாதேவன், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறித்தும், வேளாண்மை அலுவலர் ஜெயஸ்ரீ, இயற்கை விவசாயம் குறித்தும் பேசினர். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளர் தேவி, ரமேஷ் செய்திருந்தனர்.

