ADDED : டிச 08, 2025 06:03 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய கொடிநாளினை முன்னிட்டு கொடிநாள் வசூல் நிகழ்ச்சி நடந்தது.
ஆண்டுதோறும் நாடெங்கிலும் டிச. 7 ம் தேதி முப்படை வீரர் கொடி நாள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடு காத்த படைவீரர்களை நினைவு கொள்ளும் வண்ணம், இத்தினத்தில் முப்படைகளின் நிறம் பதித்த கொடிகள் பொதுமக்கள் அணியும் வண்ணம் வழங்கப்பட்டு, முப்படையினரை நினைவு கொள்ள வைக்கிறது. நேற்று கொடிநாள் 2025 உண்டியல் வசூல் தொடங்கி வைக்கப்பட்டது.
முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவிக்கும் வகையில், அவர்களை அழைத்து தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.
கடந்தாண்டு 1 கோடியே, 35 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் வசூல் தொகை 1 கோடியே, 12 லட்சத்து 68 ஆயிரத்து 326 ரூபாய், (83.19 சதவீதம்) மாவட்ட துறை அலுவலர்களின் முயற்சியால் வசூல் செய்யப்பட்டது.
இந்த வசூலினை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வழங்கினார்.
கடந்த, 2024ம் ஆண்டில் 100 சதவீதம் இலக்கு எய்திய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்த அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் அருள்மொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

