/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்வேலி திட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம் விவசாயிகள் கடும் அதிருப்தி
/
மின்வேலி திட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம் விவசாயிகள் கடும் அதிருப்தி
மின்வேலி திட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம் விவசாயிகள் கடும் அதிருப்தி
மின்வேலி திட்டத்தில் அதிகாரிகள் அலட்சியம் விவசாயிகள் கடும் அதிருப்தி
ADDED : டிச 11, 2025 05:49 AM
வேப்பூர்: சூரிய மின்வேலி அமைக்கும் பணியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் திட்டம் முழுமை பெறாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
வேப்பூர் அடுத்த காட்டுமயிலுார் மற்றும் கிருஷ்ணாபுரத்தில், 55 சதுர கி.மீ., சுற்றளவில் 6,112 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரில் துவங்கி, வேப்பூர் கூட்டுரோடு வழியாக பெரியநெசலுார், அடரி, அரசங்குடி வரை வனப்பகுதி உள்ளது.
இங்கு, மான்கள், மயில், எறும்பு தின்னிகள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட உயிரினங்கள் வசிக்கின்றன.
அவற்றின் உணவிற்கு புங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பழச்செடிகள், குடிநீருக்கு கான்கிரீட் தொட்டிகள், தடுப்பணைகள் அமைக்கப்பட்டன.
வனத்தையொட்டியுள்ள, 45க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், வரகு, நெல், மரவள்ளி, மணிலா பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.
இந்நிலையில், வன விலங்குகள் உணவு, குடிநீருக்காக வனத்தை விட்டு வெளியேறி, விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி பயிர்களை நாசம் செய்கின்றன.
இதனால், ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டம் அடைவதால், வனத்தையொட்டி மின்வேலி அமைக்க பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2023ல் ரூ., 50 லட்சத்தில் 10.2 கி.மீ., துாரம், சூரிய மின் வேலி அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தன. ஆனால், 10.2 கி.மீ., துாரம் முழுமையாக மின்வேலியை அமைக்காமல் சில இடங்களில் மட்டுமே மின்வேலி அமைக்கப்பட்டது.
மேலும், சூரிய மின்வேலிக்கான 'பேட்டரி'களும் திருடு போனது. பணிகள் நடக்கும் போது ஆய்வு செய்யாமலும், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடாமலும் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
திட்டம் முழுமை பெறாமல் மக்களின் வரிப்பணமும், விவசாயிகளின் விளை பொருட்களும் வீணாகிறது. அதனால், சூரிய மின்வேலி அமைக்கும் பணியை முழுவதும் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

