/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீர்த்தேக்கத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு திட்டக்குடி தாலுகா விவசாயிகள் மகிழ்ச்சி

ADDED : டிச 25, 2025 05:58 AM

திட்டக்குடி,:கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை அதிகாரிகள் முன்னிலையில் விவசாயிகள் திறந்து வைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில், வெலிங்டன் நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 29.72 (2580 கனஅடி) அடியில், தற்போது 19.00 (846.77கனஅடி) அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடப்பாண்டு விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி சாலை மறியல், காத்திருப்பு போராட்டத்திற்கு பின் நேற்று நடந்தது.
விருத்தாசலம் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன் முன்னிலையில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் இணைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தனர்.
தாசில்தார் உதயகுமார், உதவி செயற்பொறியாளர் பிரசன்னா முன்னிலை வகித்தனர். உதவி பொறியாளர்கள் வெங்கடேசன் வரவேற்றார்.
உதவி பொறியாளர்கள் சுதர்சன், செந்தில்நாதன், வெலிங்டன் நீர்த்தேக்க பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் மருதாசலம், முன்னோடி விவசாயிகள் திருமலை அகரம் பரமசிவம், ஆதமங்கலம் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, வினாடிக்கு 90 கன அடி வீதம், 90 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டக்குடி தாலுகாவில் உள்ள, 5 பாசன ஏரிகள் மற்றும் 21 கிராமங்களில் கீழ் மட்ட கால்வாய் மற்றும் அதன் மூலம் 2 கிளை வாய்க்கால்கள் மூலம் 8268 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.