ADDED : பிப் 10, 2026 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: கிள்ளையில் மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
கிள்ளை கிரீடு நகரை சேர்ந்தவர் சின்னையன் மகள் வள்ளி, 35; இவர், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கணவர் வீட்டில் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிள்ளையில் உள்ள தந்தை வீட்டில் வந்து தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி கிள்ளையில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, சின்னையன் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிந்து, வள்ளியை, தேடிவருகிறார்.

