ADDED : நவ 05, 2026 08:19 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த பிஞ்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகள் ரம்யா, 25; நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர், இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, ரம்யாவை தேடி வருகின்றனர்.
