நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி, :  புவனகிரி அடுத்த பூதவராயன்பேட்டை, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் நளினி,31. இவருக்கும் கீரப்பாளையம் மேட்டுத்தெரு டிரைவர் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
கடந்த சில மாதங்களாக நளினி உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு, புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்துவிட்டதாக கூறினார். புகாரின் பேரில், புவனகிரி இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் குமாரசாமி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

