/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யில் தீ விபத்து; நெய்வேலியில் பரபரப்பு
/
என்.எல்.சி.,யில் தீ விபத்து; நெய்வேலியில் பரபரப்பு
என்.எல்.சி.,யில் தீ விபத்து; நெய்வேலியில் பரபரப்பு
என்.எல்.சி.,யில் தீ விபத்து; நெய்வேலியில் பரபரப்பு
ADDED : மே 12, 2025 12:43 AM

நெய்வேலி : கடலுார் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி., இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்தின் முதல் யூனிட்டில், பல கோடி ரூபாய் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர், நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் தீயணைப்புத்துறை வீரர்கள், நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து, 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். என்.எல்.சி., மின்துறை இயக்குநர் வெங்கடாசலம் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து காரணமாக மின் வினியோகத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.
என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி உத்தரவின்படி, தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு குறித்து விசாரிக்க, சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி.,யில், அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.