ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 03:36 PM

அ நிறம் | அளவு
நெல்லிக்குப்பம்: ஸ்கூட்டரில் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.
நெல்லிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் வீரப்பன். ஓய்வு பெற்ற சர்க்கரை ஆலை ஊழியர்.
இவர் நேற்று காலை தனது ஸ்கூட்டரை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலை 10.30 மணிக்கு அந்த வீட்டுக்கு பால் கொடுக்க பால்காரர் வந்த போது மொபட்டில் பாம்பு புகுந்ததை பார்த்தார். உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான குழுவினர் வந்து மொபட்டை பிரித்து அதில் புகுந்திருந்த சாரை பாம்பை ஒரு மணி நேரம் போராடி பிடித்து சென்றனர்.
