/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மீன் குஞ்சுகள் விடும் திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு
/
மீன் குஞ்சுகள் விடும் திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு
மீன் குஞ்சுகள் விடும் திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு
மீன் குஞ்சுகள் விடும் திட்டம் : கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஆக 15, 2025 11:26 PM
பரங்கிப்பேட்டை, ; பரங்கிப்பேட்டை, புதுக்குப்பம் மீனவ கிராமம் அருகேயுள்ள கடற்பகுதியில் சுமார் 2.5 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் குஞ்சுகள் விடும் திட்டம் துவக்க விழா நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பின், அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் கடற்பகுதியில் குறைந்து வரும் மீன்வளத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவியுடன் கடலில் மீன்குஞ்சுகள் விடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதுக்குப்பம், பெரியக்குப்பம் மற்றும் அய்யம்பேட்டை ஆகிய கிராமங்களின் கடல் பகுதிகள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
'கொடுவா மீன்குஞ்சுகள் வளர்த்தல்' திட்டத்தில் இருந்து முதற்கட்டமாக 6,000 கொடுவா மீன் குஞ்சுகள் புதுக்குப்பம் மீனவ கிராம கடல் பகுதியில் விடப்பட்டன. மீன் குஞ்சுகள் விடுவதால் கடலில் மீன்வளம் குறையாமல் பாதுகாக்கப்படும்' என்றார்.
சப் கலெக்டர் கிஷன்குமார், மீன்வளத் துறை இயக்குநர் வேல்முருகன், உதவி இயக்குநர்கள் ரம்யா, யோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

