/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொன்முடியை பதவி நீக்க வேண்டும் 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
/
பொன்முடியை பதவி நீக்க வேண்டும் 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
பொன்முடியை பதவி நீக்க வேண்டும் 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
பொன்முடியை பதவி நீக்க வேண்டும் 'மாஜி' அமைச்சர் சம்பத் பேச்சு
ADDED : ஏப் 25, 2025 05:22 AM
கடலுார்: இந்து மதத்தையும், பெண்களையும் இழிவுபடுத்தி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து கடலுாரில் அ.தி.மு.க., வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில் ஆரப்பாட்டம் நடந்தது.
மகளிரணி செயலாளர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சம்பத் கண்டன உரையாற்றினார். மாநில மகளிரணி துணை செயலாளர் சத்யா, மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ஆறுமுகம், தங்கமணி, மாவட்ட அவைத் தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன், செல்வ அழகானந்தம், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், பாலகிருஷ்ணன், மாதவன், கந்தன், தங்க வினோத்ராஜ், தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து கோஷங்கள் எழுப்பி அவரது படத்தை துடப்பத்தால் அடித்தனர்.
முன்னாள் அமைச்சர் சம்பத் பேசுகையில், 'பெண்களை இழிவாக பேச அமைச்சர் பொன்முடிக்கு யார் துணிச்சலை கொடுத்தது. அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்று யாராவது பேசியிருந்தால் பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியிருப்பார்.
ஆனால், பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு அந்த துணிச்சல் இல்லை. கண் துடைப்புக்கு கட்சிப்பதவியை நீக்கினால் போதுமா.
நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். ஒட்டுமொத்த தமிழக மக்களும் வெறுக்கின்ற ஆட்சியாக உள்ளது.
பெண்களை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்றார்.

