sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு

/

பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு

பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு

பொது செயலாளருக்கு வரவேற்பு முன்னாள் அமைச்சர் சம்பத் அழைப்பு


ADDED : ஜூலை 12, 2025 03:32 AM

Google News

ADDED : ஜூலை 12, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்டத்திற்கு இன்று 12ம் தேதி வருகை தரும் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமியை வரவேற்க நிர்வாகிகள் திரண்டு வர வேண்டுமென, முன்னாள் அமைச்சர், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று (12ம் தேதி) கடலுார், பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 4:15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து கடலுார் வரும் அவருக்கு மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, மஞ்சக்குப்பம், எம்.ஜி.ஆர்., சிலை, டவுன் ஹால் உள்ளிட்ட இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 4:45 மணிக்கு மஞ்சக்குப்பத்தில் ரோடு ேஷாவாக சென்று மக்களை சந்திக்கிறார். அண்ணாபாலம் சிக்னல் அருகில் பேசுகிறார்.

பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட நெல்லிக்குப்பம் அம்பேத்கர் சிலை, மேல்பட்டாம்பாக்கம் அம்பேத்கார் சிலை, அண்ணாகிராமம் அம்பேத்கர் சிலை உள்ளிட்ட இடங்களில் பேசுகிறார். இரவு 7:30 மணிக்கு பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பேசுகிறார்.

இதையடுத்து நெய்வேலி தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். எனவே, பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்.






      Dinamalar
      Follow us